கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான நத்தார் கரோல் பாடல் போட்டி
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த போட்டியானது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெறவுள்ளதுடன், குழுப்பாடலாக வழங்கப்பட வேண்டும்.
போட்டியின் விதிமுறைகள்
- அதிகபட்ச நேரம் 03 நிமிடங்கள்.
- பங்கேற்பாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 15 மற்றும் குறைந்தபட்சம் 10. (அனைத்து உறுப்பினர்களும் பாடுவது, வாசித்தல், பாடல்கள் எழுதுவது மற்றும் இசையமைப்பது உள்ளிட்டவை)
- ஒரு விண்ணப்பதாரர் ஒரு மொழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- கரோல் பாடல் ஒரு புதிய படைப்பாக இருக்க வேண்டும் (பாடல்வரிகள், மெல்லிசை, இசை) மற்றும் அது வேறு எந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடாது மற்றும் படைப்புகள் முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது. (புதிய வடிவமைப்பாக இருக்க வேண்டும்).
- இது தவிர, திணைக்களம் வழங்கும் பொதுப் பாடலையும் பாட வேண்டும்.
பாடலின் குணங்கள்
- அர்த்தமுள்ள பாடல்வரிகள் மற்றும் மெல்லிசை தரமானதாக இருக்க வேண்டும்.
- அர்த்தமுள்ள செய்தி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
- குழுவால் வழங்கப்பட்ட புதிய இசையமைப்பிற்கான பாடல்வரிகள் மற்றும் மெல்லிசை வழங்குபவர்களின் ஒப்பந்தம் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு அவர்களால் (குறித்த நபர்களால்) சான்றளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவ விபரங்கள்
- விண்ணப்பப் படிவத்தை தயாரிக்கும்போது எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய இரண்டு தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். வாடிஸ்ஆப் (WhatsApp) எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்கள் தயாரிக்கும்போது ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட வேண்டும். (குழுப்பெயர், தொடர்பு இலக்கம், விலாசம்). மேற்படி விடயங்களை கருத்திற்கொண்டு விண்ணப்பபடிவங்களை தயாரிக்கவேண்டும்.
- விண்ணப்பப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே போட்டிகள் நடாத்தப்படும் பிரதேசம் திணைக்களத்தினால் தீர்மாணிக்கப்படும். அதன்படி உங்களுக்கு அண்மையிலுள்ள போட்டிகள் நடாத்தப்படும் பிரதேசம் திணைக்களத்தினால் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
- நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
- தேவையான இசைக்கருவிகள், குழுவால் வழங்கப்பட வேண்டும், முக்கியமான வாத்தியமாக (இசைக்கருவி), கிட்டார் அல்லது வயலின் (தேவைப்பட்டால் தோல்கருவியைப் (தபேலா) பயன்படுத்தலாம்).
- விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து, 10.10.2024 ஆம் திகதிக்கு முன், மரியாதைக்குரிய அருட்தந்தை / முதல்வர் / நிறுவனத்தலைவரின் பரிந்துரையுடன் திணைக்களத்திற்கு அனுப்பவும்.
- வெற்றிபெற்ற வடிவமைப்புகளுக்கான (படைப்பிற்கான) டோக்கன்கள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பொதுப் பாடல்
“எந்தன் நெஞ்சுக்குள் நீ பிறக்க”
தொடர்பு விபரங்கள்
- மேலதிக விபரங்களுக்கு: 011 2665 584 / 0702745816 (WhatsApp)
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், 3வது தளம், இலக்கம்.180, டி.பி. ஜாயா மாளிகை, கொழும்பு 10.